– மௌலவி எம். எம்.ஸக்கி BA (Hons) மதீனா அறபு மொழியில் பிக்ஹ் எனும் வார்த்தை ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ளுதல் என்று பொருள்படும். அது மறைவானதொரு விடயமாகவோ, வெளிப்படையானதொரு விடயமாகவோ இருக்கலாம். எனினும், சில அறிஞர்கள் நுணக்கமானதொரு விடயத்தை விளங்கிக் கொள்வதற்கு மாத்திரமே ‘பிக்ஹ்’ எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பர். இவ்விரண்டாவது கருத்திலேயே அல்-குர்ஆன் …
ஷரீஆ என்றால் மார்க்கம் முழுவதையும் குறிக்கும் ஒரு சொல். ஃபிக்ஹ் என்ற வார்த்தை விரிவான ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட (அமல்) செயல் சார்ந்த ஷரீயத் கிளை, உட் பிரிவு சட்டங்களைக் கொண்ட ஒரு கல்விக்கு சொல்லப்படும். உசூலுல் ஃபிக்ஹ் என்பது ஷரீயத் சட்டங்களையும் ஃபிக்ஹ்கின் ஆதாரங்களின் முறைகளையும் சுருக்கமாக அறிந்து கொள்ளும் ஒரு கலைதான் உசூலுல் ஃபிக்ஹ் …
அறபு மொழியில் நஸக் என்ற சொல்லுக்கு நீக்குதல் மாற்றுதல் பிரதிபண்ணுதல் முதலான கருத்துக்கள் வழங்கப்படுகின்றன. இஸ்லாமியப் பரிபாஷையில் முன்னர் வந்த ஆதாரபூர்வமான ஷரீஅத் சட்டமொன்று பின்வந்த ஆதாரபூர்வமான ஷரீஆ சட்டம் ஒன்றினால் மாற்றப்படுவதை இது குறித்து நிற்கிறது. நாஸிக் என்பது மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர் வந்த சட்டத்தையும் மன்ஸுக் என்பது மாற்றத்துக்குள்ளாகு முன்னர் இருந்த சட்டத்தையும் …