அறபு மொழியில் நஸக் என்ற சொல்லுக்கு நீக்குதல் மாற்றுதல் பிரதிபண்ணுதல் முதலான கருத்துக்கள் வழங்கப்படுகின்றன. இஸ்லாமியப் பரிபாஷையில் முன்னர் வந்த ஆதாரபூர்வமான ஷரீஅத் சட்டமொன்று பின்வந்த ஆதாரபூர்வமான ஷரீஆ சட்டம் ஒன்றினால் மாற்றப்படுவதை இது குறித்து நிற்கிறது. நாஸிக் என்பது மாற்றத்தை ஏற்படுத்திய பின்னர் வந்த சட்டத்தையும் மன்ஸுக் என்பது மாற்றத்துக்குள்ளாகு முன்னர் இருந்த சட்டத்தையும் …